தென்னிலங்கையில் பேருந்தில் சென்ற மாணவிக்கு நபர் ஒருவரினால் நேர்ந்த கதி
களுத்துறையில் மேலதிக வகுப்பிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த 14 வயதுடைய சிறுமியை, பொலிஸ் அதிகாரி என ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் சீண்டல் செய்த நபர் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக தெற்கு களுத்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த 8ஆம் திகதி மேலதிக வகுப்பிற்குச் சென்றிருந்த குறித்த சிறுமி, வகுப்பு முடிவடைந்ததும் மத்துகம - கொழும்பு பேருந்து மூலம் இரவு 7.00 மணியளவில் களுத்துறையை வந்தடைந்துள்ளார்.
மாணவிக்கு நேர்ந்த கதி
அங்கிருந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக களுத்துறை பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த போது, முகக்கவசம் அணிந்திருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேருந்தின் ஜன்னலைத் தட்டியுள்ளார்.

தான் ஒரு பொலிஸ் அதிகாரி எனக் கூறி, சில விபரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறி சிறுமியை கீழே இறங்குமாறு பணித்துள்ளார்.
அதனை நம்பி பேருந்தை விட்டு கீழே இறங்கிய சிறுமியை, களுத்துறை பிரதான பாலத்திற்கு அடியில் அழைத்துச் சென்று பாலியல் சீண்டல் செய்துள்ளார்.
மருத்துவப் பரிசோதனை
பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி விசேட மருத்துவப் பரிசோதனைக்காக களுத்துறை கல்லஸ்ஸ சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri