போலி பி.சி.ஆர் அறிக்கைகளை தயாரித்த மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
வெளிநாடு செல்வோருக்கான போலி பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை தயாரித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் மார்ச் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று 22 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேக நபர் நாளை (23) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லம்பிட்டிய, மினுவாங்கொடை மற்றும் களுத்துறை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 32, 33 மற்றும் 28 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் தனியார் வைத்தியசாலையொன்றின் பெயரில் போலியான பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கைகளை வழங்கியுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.



