வெள்ளவத்தை மற்றும் கிருலப்பனை தொடர்பில் பரப்பப்படும் போலியான செய்தி!
வெள்ளவத்தை மற்றும் கிருலப்பனை பொலிஸ் பகுதிகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தியை பொலிஸார் மறுத்துள்ளனர்.
வெள்ளவத்தை மற்றும் கிருலப்பனை பகுதிகளில் முறையே 140 மற்றும் 106 பேருக்கு கோவிட் தொற்று இருப்பதாகவும் வரும் நாட்களில் குறித்த பொலிஸ் அதிகார பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்படும் என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
எவ்வாறாயினும், கோவிட் தொற்றின் இரண்டாவது அலையின் போது வெளியான தகவல்களே மீண்டும் இவ்வாறு வெளியாகியுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் 35 கோவிட் -19 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பகுதியில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான கோவிட் வழக்குகள் பதிவாகவில்லை என்றும் அத்தகைய அறிவிப்பில் எந்த உண்மையும் இல்லை என்றும் கிருலப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri