போலி இலக்கத் தகடுகளை தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு! ஒருவர் கைது
சீதுவ பகுதியில் போலி இலக்கத்தகடுகளை தயாரிக்கும் நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று (29) மேற்கொண்ட சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 56 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன்போது 3 போலி இலக்கத் தகடுகள், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முத்திரை பதித்த ஸ்டிக்கர்கள், தேசிய சின்னம் பொறித்த 67 ஸ்டிக்கர்கள் மற்றும் இலக்கத் தகடுகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பிற உபகரணங்களை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரசிகர்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கும்.. விஜய் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் சரத்குமார் Cineulagam
கட்டுப்பாடு விதித்த ஐரோப்பா... எரிவாயு ஏற்றுமதியை இந்த நாடுகளுக்கு இருமடங்காக அதிகரித்த ரஷ்யா News Lankasri