அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் போலி காணி உறுதி : மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்
மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகில் சிலர் அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் போலி காணி உறுதிகளைக் கொண்டு காணிகளை அபகரிக்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை கல்லடி பாலத்திற்கு அருகில் முன்னெடுத்துள்ளனர்.
கடுமையான வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாவது
ஆட்சியாளர்களின் பாராமுகமான நிலையினால் பாதிப்பினை சந்திக்கும் மக்கள், உயர் அதிகாரிகளே கவனம் எடுத்து அரசகாணியினை பாதுகாத்து தாருங்கள், அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் காணியில் அடிக்கடி அத்துமீறல் யார், யாருக்கு உடந்தை போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போலி காணி உறுதிகளை செய்து மோசடிகளில் ஈடுபடும் கும்பல்கள் அரச அதிகாரிகளின் துணையுடன் நீதிமன்றங்களை பிழையான வகையில் வழிநடாத்தி அரச காணிகளை அபகரிக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்லடி பாலத்திற்கு அருகில் காணப்படும் நீண்டகாலமாக வடிச்சல் காணியாகவுள்ள நிலையில் அதனை அடைத்து நிரப்புவதனால் எதிர்காலத்தில் குறித்த பகுதியானது கடுமையான வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாவதுடன் கல்லடி தொடக்கம் காத்தான்குடி வரையான பகுதிகளும் பாதிக்கப்படும் நிலைமை காணப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam