அநுர அரசுக்கு தொடரும் தோல்விகள்
சமகால அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் உள்ளது.
எனினும் நகர சபைகளில் அதன் ஆதிக்கம் கேள்விக் குறியாக மாறி வருவதாக அண்மை செயற்பாடுகள் அமைந்துள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலுள்ள நகர சபைகளுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நகர சபைகளில் தோல்வி
நேற்றையதினம் அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட மூன்று சபைகளில் தோல்வி ஏற்பட்டுள்ளது.

ஹிக்கடுவ, புலத்கொஹுபிட்டிய, ரத்தோட்டை நகர சபைகளுக்கான வரவு செலவுத்திட்டம் தோல்வியை தழுவியுள்ளது.
இதுவரை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மொத்தமாக 17 நகர சபைகளில் தோல்வி ஏற்பட்டுள்ளன.
இதேவேளை எதிர்க்கட்சிகளின் ஆதிக்கம் உள்ள மேலும் 36 நகர சபைகளில் அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தோல்வி அடையும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.