நாட்டு மக்களுக்கு சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்ட அறிவிப்பு
நாட்டுக்காக நான் செய்த சில விடயங்களை மறந்தாலும் நாட்டு மக்கள் அவற்றை நினைவுகூருவார்கள் என நினைப்பது நகைப்புக்குரியது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க தனது 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தனது முகநூல் கணக்கின் பதிவொன்றினையிட்டு இதனை கூறியுள்ளார்.
“இன்று நான் இந்த பூமியில் எழுபத்தொன்பதாவது வயதைக் கடந்து எண்பது வயதை எட்டியுள்ளேன்.எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என் நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பல விடயங்களைச் செய்திருக்கின்றேன்.
வாழ்த்துக்கள்
நான் பல விடயங்களை செய்திருக்கலாம். அவற்றில் சிலவற்றை நான் மறந்துவிட்டேன் என்றால், நாட்டு மக்கள் அவற்றை நினைவில் வைத்திருப்பதை எண்ணுவது நகைப்புக்குரியது.ஆனால் இன்று முழுவதும் எனக்கு கிடைத்த வாழ்த்துக்களில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் என்னை நேசிக்கும் சிலரது நினைவுகள் எனக்கு ஒரு விடயத்தை தெளிவுபடுத்தியது.
நான் செய்தது, சொன்னது எல்லாம் ஞாபகம் இல்லாவிட்டாலும், பலருக்கு இன்னும் நினைவில் இருக்கும் பொதுவான ஒன்று இருக்கின்றது. அதுவே இந்த நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் எனக்குள்ள உண்மையான அன்பு. அது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
பல தசாப்தங்களாக பல விமர்சனங்கள் மற்றும் அவதூறுகள் இருந்தபோதிலும், நாட்டிற்கான எனது கடமையை நிறைவேற்றுவதற்கான வலிமையை உங்கள் அன்பே எனக்கு வழங்கியதாக இன்றும் நான் நம்புகிறேன். அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
