முதல் முறையாக மிகப் பெரும் நட்டத்தை சந்தித்த பேஸ்புக்! ஏற்பட்டுள்ள சரிவு தொடர்பில் வெளிவந்த தகவல்
ஃபேஸ்புக்கின் உரிமையாளர் மெட்டா தளத்தின் பங்கு பரிமாற்றம் நேற்று வியாழன் அன்று 230 பில்லியன் டொலர்களால் சரிவை சந்தித்துள்ளது.
கடந்த காலாண்டு புள்ளிவிபரங்களில் முதலீட்டாளர்களின் அதிருப்தி காரணமாகவே பங்குகள் 26.4% வீதத்தினால் சரிவடைந்துள்ளன.
இதேவேளை ஃபேஸ்புக்கின் நாளாந்த செயலில் உள்ள பயனர்களும் கடந்த 18 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக குறைந்துள்ளதாகவும் மெட்டா தெரிவித்துள்ளது.

அத்துடன் ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் தரவின்படி பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு விலை சரிவு காரணமாக, அதன் தலைமை நிர்வாகி மார்க் ஸூக்கர்பெர்க்கின் சொத்தின் நிகர மதிப்பு 31 பில்லியன் டொலர்களால் குறைந்துள்ளது.
இதன்படி, பேஸ்புக் உரிமையாளர்- ஸூக்கர்பெர்க்கின் தனிப்பட்ட செல்வத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி எஸ்தோனியா நாட்டின் ஒரு வருடத்துக்கான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய காலாண்டில் 1.930 பில்லியனாக இருந்த ஃபேஸ்புக்கின் பயனர்கள், டிசம்பர் இறுதி வரையிலான மூன்று மாதங்களில் 1.929 பில்லியனாக குறைந்துள்ளதாக மெட்டாத் தளம் வெளியிட்ட தகவலை அடுத்தே, பங்கு பரிமாற்றத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் பார்வையாளர்கள், குறிப்பாக இளைய பயனர்கள் போட்டித்தன்மை காரணமாக வெளியேறியதால், நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக ஸூக்கர்பெர்க் கூறியுள்ளார்.

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam