மோட்டார் சைக்கிளில் சாகசம் காட்டிய இளைஞர் குழு கைது
ஹொரணை - கொழும்பு வீதியின் கும்புக பகுதியில் முகப்புத்தகம் ஊடாக ஒழுங்குசெய்யப்பட்ட பந்தயத்தில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்ற எட்டு இளைஞர்கள் மொரகஹஹேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குபுக்காவில் இருந்து கொனபால வரை இளைஞர்கள் சத்தமாகவும், கவனக்குறைவாகவும் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்வதாக மொரகஹஹேன பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்ற எட்டு இளைஞர்களை கைது செய்ததுடன் வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது நடவடிக்கை
இந்நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் முன் சக்கரம் தூக்கி எறியும் வகையிலும், பக்கவாட்டு கண்ணாடிகள் சுழலும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் களுத்துறை, மொரந்துடுவ, ஹொரணை போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 13 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri
