ஃபேஸ்புக் மூலமாக வாகன மோசடி - பிரதான சந்தேகநபர் கைது

Sri Lanka Police Facebook Crime
By Rukshy Jul 15, 2026 08:03 AM GMT
Report

ஃபேஸ்புக் ஊடாக விளம்பரம் செய்து வாகனங்களை விற்பனை செய்துவிட்டு, பின்னர் அந்த வாகனங்களை மீண்டும் கொள்ளையடிக்கும் பாரிய மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யக்கல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் ஆவார்.

பதற்றத்தினால் மூடப்பட்ட வான் பரப்பு : கட்டுநாயக்கவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

பதற்றத்தினால் மூடப்பட்ட வான் பரப்பு : கட்டுநாயக்கவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தி

ரூபாய் 40 இலட்சம் பணம் செலுத்தி கொள்வனவு செய்யப்பட்ட வேன் ஒன்றை, ஆயுதமேந்திய குழுவினர் மிரட்டி கொள்ளையடித்ததாக ஜூலை முதலாம் திகதி பொலிஸ் மா அதிபர் நிவாரணப் பிரிவில் நபர் ஒருவர் முறைப்பாடு செய்திருந்தார்.

இம்முறைப்பாடு தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

ஃபேஸ்புக் மூலமாக வாகன மோசடி - பிரதான சந்தேகநபர் கைது | Facebook Advertisements Using Robbery Scheme

அதற்கமைய, இந்த மோசடிச் சம்பவத்துடன் பெலும்மஹர, முந்துங்கொட பகுதியில் அமைந்துள்ள வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் உட்பட சுமார் 10 பேர் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

இந்தநிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி யக்கல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் முகநூல் மூலம் வாகனங்களை விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தி, அவற்றை விற்பனை செய்த பின்னர், திட்டமிட்ட முறையில் அந்த வாகனங்களைப் பின்தொடர்ந்து சென்று ஆயுத முனையில் கொள்ளையடித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் இரு கொள்ளைச் சம்பவங்கள் 

இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பியோடியுள்ளனர்.

நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலகெடிஹேன பகுதியில் அமைந்துள்ள வாகன விற்பனை நிலைய உரிமையாளரின் வீட்டில் சோதனையிட்ட அதிகாரிகள், அங்கிருந்த 2 வாள்கள், 2 பிஸ்டல் மெகசின்கள், 3 தோட்டாக்கள் மற்றும் ஜீப் வண்டியொன்றை பொலிஸ் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

ஃபேஸ்புக் மூலமாக வாகன மோசடி - பிரதான சந்தேகநபர் கைது | Facebook Advertisements Using Robbery Scheme

இதேபோன்ற முறையில் நடத்தப்பட்ட மேலும் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இவர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (14) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, நாளை (16) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் கொடூர செயலில் ஈடுபடும் ஆபத்தான நபர்! திணறும் இன்டர்போல்

இலங்கையில் கொடூர செயலில் ஈடுபடும் ஆபத்தான நபர்! திணறும் இன்டர்போல்

இலங்கையில் உயிரிழந்த கோடீஸ்வர பெண் - சடலத்திற்கு போட்டி போடும் தரப்பினால் சர்ச்சை

இலங்கையில் உயிரிழந்த கோடீஸ்வர பெண் - சடலத்திற்கு போட்டி போடும் தரப்பினால் சர்ச்சை

you may like this video

   

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US