இலங்கையில் உயிரிழந்த கோடீஸ்வர பெண் - சடலத்திற்கு போட்டி போடும் தரப்பினால் சர்ச்சை

Sri Lanka Police Kandy Sri Lanka Magistrate Court Hospitals in Sri Lanka Death
By Vethu Jul 15, 2026 07:27 AM GMT
Report

தவுலகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவவுல பிரதேசத்தில், உயிரிழந்த பெண்ணின் உடல் சுமார் ஒரு மாதமாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.

பல சொத்துகளுக்கு உரிமையாளரான 75 வயதுடைய பெண், உயிரிழந்ததையடுத்து, அவரது உடலை பெற்றுக்கொள்வதில் நான்கு தரப்பினரிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமை இதற்கு காரணமாகும்.

உயிரிழந்தவரின் இறுதிச் சடங்குகளை முன்னெடுப்பதற்காக முன்வந்த நான்கு தரப்பினராலும் தமக்கு சட்டபூர்வமான உரிமை உள்ளதை உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளது.

இலங்கையில் கொடூர செயலில் ஈடுபடும் ஆபத்தான நபர்! திணறும் இன்டர்போல்

இலங்கையில் கொடூர செயலில் ஈடுபடும் ஆபத்தான நபர்! திணறும் இன்டர்போல்

கோடீஸ்வர பெண்

நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை உடலை எந்த தரப்பினருக்கும் கையளிக்கப் போவதில்லை என மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன தீர்மானித்துள்ளார்.

இலங்கையில் உயிரிழந்த கோடீஸ்வர பெண் - சடலத்திற்கு போட்டி போடும் தரப்பினால் சர்ச்சை | 4 Groups Wait For A Women S Body

குறித்த பெண்ணுக்கு சொந்தமான 2 மாடி வீட்டின் மேல் தளத்தில், சுமார் 16 வருடங்களாக தம்பதி ஒன்று தங்கள் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளனர். அவர்கள் உயிரிழந்த பெண்ணை மிகவும் அன்புடன் கவனித்து வந்துள்ளனர். அத்துடன், 14 வருடங்களாக அவரிடம் வாடகைப்பணத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை.

உயிரிழந்த பெண் சுகவீனமுற்று பேராதனை போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றபோது, அவரது அனைத்து தேவைகளையும் அந்த குடும்பமே நிறைவேற்றியுள்ளமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இந்தக் குடும்பத்தினர் உடலை பொறுப்பேற்று இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள முன்வந்தபோது, உயிரிழந்த பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் என கூறி மேலும் மூவர் முன்வந்துள்ளனர்.

பிரேத பரிசோதனை

அவர்களில் உயிரிழந்த பெண்ணின் சகோதரியின் மகன், மற்றொரு உறவினர் மற்றும் கணவர் என்று கூறிக்கொள்ளும் நபர் ஒருவரும் அடங்குவர். உயிரிழந்த பெண் திருமணம் செய்யாதவர் என்பது தெரியவந்துள்ளது.  

இலங்கையில் உயிரிழந்த கோடீஸ்வர பெண் - சடலத்திற்கு போட்டி போடும் தரப்பினால் சர்ச்சை | 4 Groups Wait For A Women S Body

இதனையடுத்து, கணவர் என்று கூறிக் கொள்ளும் நபர் சமர்ப்பித்த திருமணப் பதிவை ஆய்வு செய்ததில், அதில் குறிப்பிடப்பட்ட பெயர் உயிரிழந்த பெண்ணின் சகோதரியினுடையது என்பது தெரியவந்துள்ளது.

அதற்கமைய, உயிரிழந்த பெண்ணின் உடலை யாருக்கு ஒப்படைப்பது என்பதில் கடுமையான சிக்கல் நிலை எழுந்துள்ளது. இதனால், பிரேத பரிசோதனையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

நீதிமன்றத்திற்கு விடயங்களை முன்வைத்து, உரிமை தொடர்பான சிக்கலை தீர்த்துக்கொண்டு வருமாறு பொலிஸாருக்கு மரண விசாரணை அதிகாரி அறிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் பாதாள உலகத்தின் கட்டுப்பாட்டில்! நடைமுறைப்படுத்தப்படாத பரிந்துரைகள்

சிறைச்சாலைகள் பாதாள உலகத்தின் கட்டுப்பாட்டில்! நடைமுறைப்படுத்தப்படாத பரிந்துரைகள்

கைதியின் கோரிக்கையால் ஏற்பட்ட விபரீதம்! மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படும் சிசிடிவி காட்சிகள்

கைதியின் கோரிக்கையால் ஏற்பட்ட விபரீதம்! மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படும் சிசிடிவி காட்சிகள்

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US