இலங்கையை மோசமாக தாக்கிய டித்வா புயல்! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 481 ஆக அதிகரித்துள்ளதுடன், 345 பேர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 16 ஆம் திகதி முதல் இன்று (04) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விபரம் கூறப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.
இன்று (4) வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பதிவான மரணங்கள்
அதன்படி, கண்டி (118), நுவரெலியா (89), பதுளை (83), குருநாகல் (56), கேகாலை (30), புத்தளம் (20), மாத்தளை (28) மற்றும் கம்பளை (12) ஆகிய பகுதிகளில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அதேவேளை, 350 பேர் காணமல்போயுள்ளனர். அத்துடன், அனர்த்தங்களினால் 51,765 குடும்பங்களைச் சேர்ந்த 188,974 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.