கிளிநொச்சியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர்
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலர்பிரிவின் கீழான பிரதேசங்களில் வெள்ள பாதிப்பிற்குள்ளான நிலமையில் புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவு மற்றும் பாரதிபுரம் மற்றும் கண்ணகிநகர் கிராமத்திலிருந்து 11 குடும்பங்களைச் சேர்ந்த 34 அங்கத்தவர்களை வெள்ள அனத்தங்கரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இராணுவத்தினரின் உதவியுடன் அங்கிருந்து பாதிக்கப்பட்ட நிலையில் புன்னைநீராவி G.T.M.S பாடசாலையில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை.
வெள்ள பாதிப்பின் நிலமைகளை அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்,மேலதிக அரசாங்க அதிபர் (காணி), அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர்,கண்டாவளை பிரதேச செயலர்,இராணுவத்தினர் உள்ளிட்ட குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உடனடியான உதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அனர்த்த நிலமையினை கருத்தில் கொண்டு குளத்தின் நீரேந்தும் பகுதிகளின் கீழ் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும் தமது பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri