கொத்மலையில் இருந்து உலங்கு வானூர்தியில் அழைத்து வரப்பட்ட மக்கள்
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பேரனர்த்தங்களின் காரணமாக நுவரெலியா மற்றும் கொத்மலை பகுதிகளில் சிக்குண்டுள்ள மக்கள் உலங்கு வானூர்தி ஒன்றின் ஊடாக அழைத்து வரப்படுகின்றனர்.
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்றின் ஊடாக கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திற்கு இன்று சிலர் அழைத்து வரப்பட்டனர்.
உணவு விநியோகம்
நுவரெலியா மற்றும் கொத்மலை பகுதிகளில் ஏற்பட்ட பேரழிவில் காயமடைந்த மக்கள் மற்றும் குழந்தைகள் இந்த உலங்கு வானூர்தி ஊடாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலும், நுவரெலியா மற்றும் கொத்மலை பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு சுமார் 1,844 கிலோ உலர் உணவும் உலங்குவானூர்தியின் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவினால் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட MI 17 உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.