கொழும்பில் பேருந்தில் எழுதப்பட்ட வாசகத்தால் எழுந்துள்ள சர்ச்சை
கொழும்பில் (Colombo) சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் அதிசொகுசு பேருந்து ஒன்றின் பின்பக்கத்தில் ”நாடு சிங்கள மக்களுக்கு மாத்திரமே உரியது” என்ற இந்த வாசகம், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததை கண்டு பத்திரிக்கையாளர் ஒருவர் புகைப்படம் எடுத்து அதை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை காலை 7 மணியளவில் கொழும்பு பொரள்ளை பேஸ்லைன் வீதியால் இப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது இந்த வாசகத்தை அவர் கையடக்கத் தொலைபேசியின் கமராவில் புகைப்படம் எடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் முகநூலில் தெரிவித்துள்ளதாவது,
2009 யுத்தத்திற்கு பின்னர் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பது சவாலான ஒன்றாகவே காணப்படுகின்றது. இதற்கு காரணம் இந்த கடும் போக்கு சிந்தனைகள் என கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடும் போக்கு சிந்தனை
அரசியல் வாதிகளும், மதத் தலைவர்களும் வெளிப்படையாகவே தங்களின் கடும் போக்கு சிந்தனையை மக்கள் மத்தியில் விதைக்கின்றனர். அந்த சிந்தனைகளால் ஈர்க்கப்படும் பொது மக்களும் தமது எண்ணங்களை பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றனர்.

இதனை தலைநகர் கொழும்பில் பயணிக்கும் சில வாகனங்களில் காணமுடிகின்றது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan