ரணிலை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்குமாறு அந்த கட்சியின் அண்மையில் தேர்தல் ஆணைக்குழுவிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்திருந்தது.
இதனடிப்பைடையில், இன்று கூடிய தேர்தல் ஆணைக்குழு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதுடன், அது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின் 99 - ஏ சரத்திற்கு அமைய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
