கொழும்பு நகரில் வாகன சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: நூதன முறையில் திருட்டு
இலங்கையில் பணம் பறிக்கும் செயற்பாட்டில் போலியான விபத்துக்களை காட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
தாம் விபத்துக்களில் பாதிக்கப்பட்டதாக பாவனை செய்து பணம் பறிக்க முயலும் குழுக்களின் பிரசன்னம் கொழும்பு நகரில் வாகன சாரதிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது.
மக்களை மிரட்டி பணம் பறித்த சம்பவங்கள் அல்லது தப்பிச் செல்லும் சம்பவங்களும் இந்நாட்களில் பதிவாகியுள்ளன.
பெரும்பாலான சம்பவங்கள்
நகரின் பெரும்பாலான சம்பவங்கள் பல்பொருள் அங்காடிகள், மருத்துவமனைகள் மற்றும் பிரபலமான இடங்களுக்கு அருகிலேயே நடந்துள்ளன.
யூனியன் பிளேஸில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு வெளியே கடந்த வாரம் இது போன்ற ஒரு சம்பவத்தில், வாகனம் மோதியதில் தான் காயமடைந்ததாக ஒருவர் கூறியுள்ளார்.
எனினும் தனது சிற்றூந்து குறித்த நபரை மோதவில்லை என்று சாரதி கூறிய போதிலும், தமது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஒரு வாரத்திற்கு வேலையில்லாமல் இருப்பதாகவும் விபத்தில் பாதிக்கப்பட்டதாக கூறியவர் தெரிவித்துள்ளார்.
சாரதியை மிரட்டிப் பணம்
இதன்போது குறித்த நபர் கூரான ஆயுதம் ஒன்றை காட்டி, வாகன சாரதியை மிரட்டி, பணம் தரும்படி வற்புறுத்தியுள்ளார். இந்த சம்பவம் நிகழ்ந்த போது இரவு நேரமாகையால், ஆதரவற்ற சாரதி குறித்த மோசடிக்காரனுக்கு பணம் கொடுத்து தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மற்றுமொரு சம்பவத்தில், நாவல வீதியில் வாகன சாரதி ஒருவரை பின்தொடர்ந்து சென்ற உந்துருளியின் சென்ற ஒருவர், தமது உந்துருளியை குறித்த வாகனம் மோதியதாகக் கூறி வாகனத்தை நிறுத்த முற்பட்டுள்ளார்.
எனினும் விபத்து ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த வாகன ஓட்டி, அருகில் இருந்த காவல்துறை மருத்துவமனையின் நுழைவாயிலுக்கு வாகனத்தை திருப்பியதை அடுத்து, உந்துருளியில் பயணித்தவர் தப்பிச்சென்றுள்ளார்.
மற்றொரு சம்பவத்தில், சாரதி ஒருவர் வாகனத்தின் டயரை தனது காலின் மேல் செலுத்தி, காயத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறி ஒருவர் பணத்தைக் கோர முயன்றார். எனினும் அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்த காவலாளி ஒருவர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது, அது பொய்யான தகவல் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை கோரியவர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 17 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
