இலங்கை வர்த்தகர்களுக்கு கொலைமிரட்டல்! குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை
இலங்கை வர்த்தகர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து அவர்களிடமிருந்து கப்பம் பெறும் இரு குற்றவாளிகள் வலையமைப்பு செயற்படுவதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கை வர்த்தகர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து அவர்களிடமிருந்து கப்பம் பெறும் வலையமைப்பை இயக்கிய முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்தே மேலும் இரு குற்றவாளிகள் வலையமைப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு மிரட்டல் விடுத்து கோடிக்கணக்கில் கப்பம் கோரும் துபாயில் பதுங்கியிருக்கும் திட்டமிட்ட குற்றவாளிகள் இருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
வெளியான தகவல்
இந்த இரு குற்றவாளிகளில் ஒருவர் மேல் மாகாணத்தில் வசிக்கும் வர்த்தகர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து கையாட்களை வைத்து கப்பம் கேட்பதாகவும், மற்றைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி தென் மாகாணத்தை மையமாக கொண்டு கப்பம் மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிப்பதாக செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழுள்ள கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவினரும் இவர்கள் இருவர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறன்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
