வன்முறைச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகளுக்கான காலம் நீடிப்பு: அரச தகவல் திணைக்களம்
கொழும்பு, கொள்ளுப்பிட்டி உட்பட பல பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜூலை 22 ஆம் திகதி வரை முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இழப்பீடு
கடந்த மார்ச் 31ஆம் திகதி முதல் மே 15ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி, இந்த ஆணைக்குழுவை நியமித்துள்ளார்.
முன்னதாகவே, முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய
இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



