இலங்கையில் அவசரகாலச்சட்டம் மேலும் நீடிப்பு
பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவசரகாலச்சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
முப்படைச் சட்டங்களின் ஒழுங்குவிதிகள் மற்றும் அவசரகால சட்டம் தொடர்பான விவாதம் இன்று இடம்பெற்றது.
அவசரகால சட்டம் தொடர்பான விவாதம்
பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (அவசரகால நிலையை நீட்டித்தல்) தீர்மானம் இன்று (9) நாடாளுமன்றத்தில் 110 வாக்குகள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் அவசரகாலச்சட்டத்தை மேலும் நீடிப்பதற்கு ஆதரவாக 137வாக்குகளும் எதிராக 27வாக்குகளும் அளிக்கப்படடன.
ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றின் உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன ராமநாதனும் இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.