தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு இன்று சூம் தொழிநுட்பம் ஊடாக நடைபெற்றுள்ளது.
இதன்போது பிரசாந்தனை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன், கடந்த நவம்பர் மாதம் கொழும்பில் இருந்து வருகை தந்த சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஆரையம்பதியில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமை மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
