அர்ஜுன் அலோசியஸ் நிறுவனத்திற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு
பிரபல வர்த்தகர் அர்ஜுன் அலோசியஸுக்கு(Arjun Aloysius) சொந்தமான பெர்பச்சுவல் ட்ரசரீஸ்(Perpetual Treasuries) நிறுவனத்திற்கு எதிரான தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லாத நிதி நிறுவன கண்காணிப்பு திணைக்களம் நேற்று(05.01.2024) பிற்பகல் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கான தீர்மானம், 2025 ஜனவரி 05ஆம் திகதி பிற்பகல் 4.30 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை நீடிப்பு
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பில் பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் நிறைவடையாத நிலையில், அதற்கான கால அவகாசம் பெறும் பொருட்டு இந்தத் தடை நீடிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரணில் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் செய்த மிகப்பெரிய மோசடி! அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அநுர அரசு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
