மின்வெட்டு நேரம் நீடிக்கப்படுகின்றது
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டு நேரத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சுமார் ஒன்றரை மணிநேரத்தினால் மின்வெட்டு நேரத்தினை நீடிக்க வேண்டியேற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய திருத்தப்பணிகள்
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் 300 மெகாவோட் மின்சாரம் நாளை மறுதினம் முதல் தேசிய மின்கட்டமைப்பிற்கு கிடைக்காது போகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகளால் நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் தொழிற்பாடுகள் நிறுத்தப்படவுள்ளமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தப்பணிகள் இரண்டு மாதங்கள் இடம்பெறும் என இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
