சட்டமா அதிபரின் பதவி நீடிப்பு: கூடுகிறது அரசியலமைப்பு பேரவை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்(Ranil Wickremesinghe) முன்மொழியப்பட்ட சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்புக்கான பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நாளை திங்கட்கிழமை பரிசீலிக்கப்பவுள்ளது.
இந்நிலையில், அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு மேலும் 6 மாத கால நீடிப்பு வழங்க ஜனாதிபதி அண்மையில் பரிந்துரைத்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் சட்ட விளக்கங்களை பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பதவிக்கால நீடிப்பு
இந்தநிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில், அமைக்கப்பட்டுள்ள உயர் குழுவில் அங்கம் பெற்றுள்ள சட்டமா அதிபர், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையுடன் கலந்தாய்வுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், தற்போது அவர் ஒய்வுப்பெற்றால், குறித்த விடயத்தில் தாமதம் ஏற்படலாம் என்ற அடிப்படையிலேயே பதவிக்கால நீடிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.
எனினும் சட்டமா அதிபரின் பணி நீடிப்புக்கான காரணத்தை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மறுத்துள்ளது.
இதுவரை காலமும் பதவியில் இருந்து சட்டமா அதிபரால் ஏன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை விடயத்தில் செயற்படமுடியவில்லை என்று ஆயர்கள் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |