ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு
ஒரே நாடு ஒரே சட்டம் என்னும் ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் இந்த பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலணி
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் இந்த ஜனாதிபதி செயலணியின் தலைவராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதிலும் ஒரே சட்டத்தை அமுல்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
பதவிக் காலம் நீடிப்பு
இந்த விசேட ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26ம் திகதி இந்த செயலணி நிறுவப்பட்டது.
கடந்த மே மாதம் 27ம் திகதி முதல் மூன்று வாரங்களுக்கு பதவிக் காலத்தை நீடிப்பதாக ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவித்துள்ளார்.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam