அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்! ஓய்வுபெறப் போகும் 2800 பேர் : வெளிநாட்டை நோக்கி படையெடுப்பு
சுமார் ஆறாயிரம் பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும் மூவாயிரம் பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு உத்தேசித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னதாக நாட்டில் சுமார் 20000 பொறியியலாளர்கள் கடமையாற்றி வந்தனர். இதில் ஆறாயிரம் பேர் நாட்டை வெளியேறிச் சென்றுள்ளனர்.
ஓய்வுப்பெறப் போகும் 2800 பேர்
மேலும் 2800 பேர் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய எதிர்வரும் 31ம் திகதி ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளனர்.
டொலர்களை சம்பாதிக்கும் நோக்கில் அரசாங்கம் அறிவித்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு நடைமுறையினால் மேலும் 2800 பேர் வெளிநாடுகளுக்குச் செல்ல உள்ளனர்.
எஞ்சியுள்ள 8400 பொறியியலாளர்களினால் நாட்டின் கட்டிட நிர்மானம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு, புகையிரதம், பெருந்தெருக்கள், தொடர்பாடல், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்கான இயலுமை கிடையாது என சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.