வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 33 ஆவது வருட நினைவு கூறல் (Photos)
வடக்குமாகாண முஸ்லிம் மக்கள் 1990 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் இனச்சுத்திகரிப்பு (வெளியேற்றப்பட்டு) செய்யப்பட்ட 33 ஆவது வருட நினைவுகூறல் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நேற்றையதினம் (2023.10.30) இடம்பெற்றது.
யாழ்ப்பாண அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ் பெரிய மொகதீன் ஜிம்மா பள்ளி வாசலில் இதனை நினைவுகூரும் நிகழ்வும் தமது பிரச்சனைகள் தேவைகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பையும் நடாத்தியிருந்தனர்.
இதன் போது பள்ளி வாசல்களின் பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இந்த நாளை நினைவுபடுத்தும் வகையில் தென்னை மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.
மேலும் இந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்டு தாம் மீளவும் வந்திருக்கின்ற நிலைமையில் தம்மை எவரும் கண்டு கொள்வதில்லை என கவலை தெரிவித்துள்ள முஸ்லீம் மக்கள் சகல வசதிகளையும், உரிமைகளையும் பெற்று தாமும் சுதந்திரமாக வாழுகின்ற நிலைமையை ஏற்படுத்த அனைவரதும் உதவிகளுடன் ஒற்றுமையாக ஒருமித்து செயற்பட வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.













கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
