தமிழர்களுடைய பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலே: வினோநோகராதலிங்கம்
தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடு அரசாங்கத்தின்
நிகழ்ச்சி நிரலே என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்
தெரிவித்துள்ளார்.
வவுனியாவிலுள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அதனோடு இணைந்த பிரதான சூலாயுதம் அதனோடு ஏனைய விக்கிரகங்கள் பிடுங்கப்பட்டு எறியப்பட்ட விடயத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
நீண்ட காலமாக சைவ மக்களினால் அப்பிரதேச மலைப்பகுதி புனித பிரதேசமாக வழிபடப்பட்டு வந்த ஆலயம் திட்டமிட்ட வகையிலே அரசாங்கத்தின் முகவர் அமைப்புக்களினால் புனித தலம் இடித்தழிக்கப்பட்ட மிகவும் மோசமான செயலை கண்டுபிடிக்க வேண்டும்.
எதிர்காலத்திலே இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுமாக இருந்தால் அல்லது அரசாங்கத்தின் முகவர் அமைப்புகளினால் செயற்படுகின்ற குறிப்பாக தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வன இலாகா ஏனைய மகாவலி எல் வலயம் இப்படியாக அரசாங்கத்தின் முகவர் அமைப்புகள் தமிழர் பகுதிகளில் குறிப்பாக வட கிழக்கு தாயக பிரதேசங்களில் திட்டமிட்டு நில அபகரிப்பை இது போன்ற அமைப்புக்களின் ஊடாக மேற்கொள்வதனை கண்டிக்கின்றோம்.
கண்டனக் குரல்களை அரசாங்கம் செவிமடுப்பதில்லை
தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டே வருகின்றன. அரசாங்கத்திற்கு எதிராக கண்டன குரல்களை நாங்கள் மட்டுமல்ல சர்வதேசமும் இவ் விடயத்தில் தலையிட்டாலும் அரசாங்கம் இதனை பற்றி செவி சாய்ப்பதாகவே இல்லை. இவ் விடயங்களை தொடர்ச்சியாக பார்த்து கொண்டிருக்கின்றோம்.
குறிப்பாக தொல்பொருள் திணைக்களம் ஏறக்குறைய 330 பிரதேசங்கள் தொல்பொருள் திணைக்களத்திற்குரிய இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் வடமாகாணத்தில் மட்டும் 167 இடங்கள் தொல்பொருள் திணைக்களத்திற்குரிய இடமாக பிரகடனப்படுத்தி அபகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் தான் ஏனைய திணைக்களங்களும் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாகவே இருக்கின்றது.
அரசாங்கத்தின் அனுசரணையோடு பௌத்தமயமாக்கல்
இதில் அரசாங்கம் சம்மந்தப்படவில்லை என கூற முடியாது. அரசாங்கத்தின் ஆசிர்வாதத்தோடு அனுசரணையோடு தான் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
வெடுக்குநாறி மலையில் உள்ள சைவ அடையாளங்கள் திட்டமிட்ட வகையிலே இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கின்றது. மிலேச்சத்தனமான மிகவும் கொடுங்கோல் ஆட்சியினுடைய வெளிப்பாடாக தான் இருக்கிறது.
இதனை இனங்கண்டு சம்பந்தப்பட்டவர்கள் யார், தொல்பொருள் திணைக்களமாக இருக்கலாம் அவர்களை பாதுகாக்கின்ற பாதுகாப்பு படையாக இருக்கலாம் முழுமையான விசாரணை நடைபெற்று இதன் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நாளை 30 ஆம் திகதி கண்டன பேரணிக்கு வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஆதரவு வழங்க
இருக்கின்றோம். வவுனியா மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் முழுமையான ஆதரவை
வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
