எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரம்: பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்
எக்ஸ்பிரஸ் பேர்ள் காப்புறுதியாளர்களுடன் இலங்கைப் பிரதிநிதிகள் பயனுள்ள பேச்சுக்களை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சட்டமா அதிபர் தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட இலங்கை தூதுக்குழுவினர், கொழும்பு கடலில் தீயினால் நாசமடைந்த சரக்குக் கப்பலான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமையாளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் மற்றும் கப்பலின் காப்புறுதியாளர்களுடன் இந்த வார ஆரம்பத்தில் பயனுள்ள பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
சிங்கப்பூரில் ஜூலை 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போது, இரு தரப்பினரும் சம்பவத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்து பேசியுள்ளனர்.
அரசு தாக்கல் செய்த வழக்கு
கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூரில் இலங்கை அரசாங்கம் தாக்கல் செய்த வழக்கை தொடர்ந்து இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது.
இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் மற்றும் மீன்பிடி அமைச்சகம் முன்வைத்த நிலுவையில் உள்ள இடைக்கால கோரிக்கைகளை மதிப்பிடுவதே பேச்சுக்களின் முக்கிய மையமாக இருந்துள்ளது.
இந்தநிலையில் தமது கோரிக்கைகளின் மதிப்பீடு விரைவாகவும் திறமையாகவும் கையாளப்படும் என்று கப்பல் காப்பீட்டாளர்களிடமிருந்து இலங்கை பிரதிநிதிகள் உறுதிமொழியைப் பெற்றுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது இலங்கையின் சட்டமா அதிபர், இலங்கை கடற்பரப்பிற்குள் தற்போது நடைபெற்று வரும் சிதைவு நீக்கம் மற்றும் குப்பைகளை மீட்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்த வேண்டுகோளுக்கு கப்பல் உரிமையாளரின் காப்பீட்டாளர்கள் சாதகமாக பதிலளித்தனர்.
தீ விபத்தில் எரிந்து நாசம்
இந்தநிலையில் இந்த கலந்துரையாடல்கள் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தினால் சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகளுக்கு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2021 மே 20 அன்று சிங்கப்பூர் கொடியுடன் கூடிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல், கொழும்பு கடற்கரையிலிருந்து 16 கிலோ மீற்றர் தொலைவில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமானது.
சம்பவத்தின் போது, அது 25 டன் நைட்ரிக் அமிலம், பிற இரசாயனங்கள் மற்றும் குறைந்த அடர்த்தி கொண்ட பாலிஎதிலீன் துகள்கள் உட்பட குறைந்தது 1,500 கொள்கலன்களை கப்பல் கொண்டிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
