எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீ விபத்து தொடர்பில் கப்பலின் தலைமை அதிகாரி மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்ளூர் முகவர் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் சட்டவிரோதமானது எனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட MV X-PRESS PEARL என்ற கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீ இப்போது கட்டுப்பாட்டு அறை அமைந்துள்ள கப்பலின் பின் பகுதிக்கு பரவியுள்ளதுடன் கப்பலில் இருந்து கடலில் விழும் கொள்கலன்களும் பல்வேறு பொருட்களும் கடல் அலைகளின் தன்மைக்கு ஏற்ப கரையொதுங்கின.
நட்டயீடு வழக்கு
இலங்கை துறைமுக ஆணையம், இந்திய கடலோர காவல்படை, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை தீயைக் கட்டுப்படுத்த கூட்டு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில் சர்வதேச கடற்பரப்புக்களுக்கும் அச்சுறுத்தலாகிய குறித்த தீவிபத்து தொடர்பில் கப்பலுக்கு சொந்தமான சிங்கபூர் நிறுவனத்தின் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நட்டயீடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW