பேர்ல் கப்பல் வழக்கு விவகாரம்: நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு
எக்ஸ்பிரஸ் பேர்ல் (Express Pearl) கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு எதிராக கொழும்பு (Colombo) மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த கப்பலின் உள்ளூர் பிரதிநிதிகள் நிறுவன பணிப்பாளர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சட்டவிரோதமானவை எனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
மனு தாக்கல்
இந்த மேல்முறையீட்டு மனு, ஏ.எச்.எம்.டி. நவாஸ், குமுதுனி விக்ரமசிங்க மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதன்போது, நிறுவனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், இந்த வழக்கில் கப்பலின் கெப்டன் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டுவது சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.
இதனை அடுத்தே மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |