இலங்கை கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன வங்கி பரிசீலனை
சீன எக்ஸிம் வங்கி, பொருளாதார நலன்களின் அடிப்படையில் இலங்கைக்கான மறுசீரமைப்பு கடன்களை பரிசீலிக்க உள்ளது.
எனினும் இலங்கைக்கு இந்த ஆண்டு இறுதி வரை வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவகாசத்தை நீடிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு
இலங்கைக்கான நிதிகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மீளாய்வுக்கு முன்னதாக, இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் சீனாவின் இரண்டு வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தெரியவந்துள்ளது.
சீனா டெவலப்மென்ட் வங்கியின் வணிக் கடன்கள் அனைத்தையும் மறுசீரமைக்காமல், சலுகை மற்றும் வணிக ரீதியான எக்சீம் கடன்களை ஓரளவு மறுசீரமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது இரண்டு தரப்பினரும் விவாதித்தனர்.
இதன்போது உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பலதரப்பு நிறுவனங்களின் கடன்களும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று சீன வங்கி அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் பரிந்துரைத்தனர்.
பொலிஸாரின் முன்னிலையில் கஜேந்திரன் மீதான தாக்குதல்: சுமந்திரன் விடுத்துள்ள வேண்டுகோள் - செய்திகளின் தொகுப்பு (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |