யாழில் தனியார் காணியில் மீட்கப்பட்ட ஏராளமான வெடி பொருட்கள்!
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் ஏராளமான வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்றையதினம்(22) மேற்குறித்த பகுதியிலுள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசலகூடத்திற்கான குழி வெட்டுவதற்காக முற்பட்ட வேளை வெடி பொருட்கள் அவதானிக்கப்பட்டது.
இதனையடுத்து, யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிசார் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
மீட்பு பணி
அந்தவகையில் இன்றையதினம் குறித்த வெடிபொருட்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது ஏராளமான ஆயுதங்கள், T 56 ரக துப்பாக்கிகள் 30, துப்பாக்கி ரவைகள் 5000 என்பன மீட்கப்பட்டன.
யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்ற இந்த மீட்பு பணியில் யாழ்ப்பாண பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பொலிசார் ஆகியோர் ஈடுபட்டனர்.
குறித்த ஆயுத மீட்பு தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல்-தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











