முல்லைத்தீவில் வெடிமருந்து மற்றும் கசிப்புடன் ஒருவர் கைது
முல்லைத்தீவு நகர் பகுதியில் சட்டவிரோத வெடி மருந்து மற்றும் கசிப்பினை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு நகர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் இன்று (24) மாலை வேளை ஈடுபட்ட முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நின்ற நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்த போது அவரிடம் இருந்து சட்ட விரோத வெடி மருந்து மற்றும் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.
சுதந்திரபுரம், உடையார் கட்டு புதுக்குடியிருப்பினை சேர்ந்த 42 அகவையுடைய நபரிடம் இருந்து 200 கிராம் வெடி மருந்து மற்றும் 1500 மில்லிலீற்றர் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இவரை நாளை (25) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri