மனிதர்கள் வாழாத தீவிலிருந்து மீட்கப்பட்ட வெடி மருந்துகள் (Photos)
இந்தியாவில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் நேற்றைய தினம் (20.10.2022) மீட்கப்பட்டுள்ளன.
400 ஜெலினைற் வெடி மருந்து குச்சிகள் மீட்பு
யாழ்ப்பாணம் கக்கடைதீவிலிருந்தே மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 ஜெலினைற் வெடி மருந்து குச்சிகள் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் நேற்று மாலை 6 மணியளவில் கக்கடைதீவிற்கு சென்ற கடற்படையினர் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜெலினைற் வெடி மருந்து குச்சிகளை மீட்டுள்ளனர்.
மனிதர்கள் வாழாத தீவு
இவ்வாறு மீட்கப்பட்ட வெடிபொருட்கள் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த தீவில் மனிதர்கள் வாழ்வதில்லை எனவும் கூறப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 5 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam