மித்தெனியவில் பெருமளவில் மீட்கப்பட்டுள்ள வெடிபொருட்கள்
அம்பாந்தோட்டை, மித்தெனியவில் ஐஸ் போதைப் பொருளை உற்பத்தி செய்வதற்காக தருவிக்கப்பட்ட இரசாயனங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த இரசாயனங்கள் கண்டு பிடிக்கப்பட்ட பகுதியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விசாரணைகள்
ஆயுதங்கள், வெடிபொருட்கள், துப்பாக்கி தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேல் மாகாண வடக்கு குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகளும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் இணைந்து இந்த வெடிபொருட்களை கண்டு பிடித்துள்ளனர்.
மரவள்ளிகிழங்கு தோட்டமொன்றில் வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட 5 கைக்குண்டுகள், ரி56 ரக துப்பாக்கிக்காக பயன்படுத்தப்படும் 17 தோட்டாக்கள் காட்டுத் துப்பாக்கி உள்ளிட்ட பொரு்டகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.



