அமெரிக்காவில் வெடித்து சிதறிய கேளிக்கை வாகனம்! இப்படிக்கு உலகம்
அமெரிக்காவின் Tennessee மாநிலத்தில் கேளிக்கை வாகனம் ஒன்று பயங்கரமாக வெடித்து சிதறிய சம்பவம் நகரம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tennessee மாநிலத்தில் உள்ள Nashville நகரத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து Nashville நகரின் தலைமை பொலிஸ் அதிகாரி John Drake கூறுகையில், நகரப் பகுதியில் துப்பாக்கிச் சூடு குறித்த தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கும் போது பொலிஸ் அதிகாரிகள் ஒரு கேளிக்கை வாகனத்தை கண்டுபிடித்தனர்.
குண்டு வெடிப்பதற்கு முன்னர், 15 நிமிடங்களுக்குள் குண்டு வெடிக்கும் என்று கூறி பதிவு செய்யப்பட்ட ஆடியோ மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது என Drake கூறியுள்ளார்.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான இப்படிக்கு உலகம் தொகுப்பு,