ரஷ்யாவின் மோசமான செயல்! உக்ரைன் கொடுத்த பதிலடியால் திணறும் புடின்
உக்ரைன் இராணுவம் நேற்று(28.04.2023) ட்ரோன் மூலம் நடத்திய தாக்குதலில், ரஷ்யாவின் எல்லைக்குள் உள்ள, கிரிமியாவின் முக்கிய நகரமான செவஸ்டோபோல் பகுதியில் எரிபொருள் டேங்குகள் வெடித்து சிதறியுள்ளன.
இந்த விபத்தில் பெரிதாக உயிர் தேசங்கள் ஏதும் ஏற்படவில்லை என ஆளுநர் மிகைல் ரஸ்வோஜாயேவ் தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திடீர் தாக்குதல்
திடீரென நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், அடுத்தடுத்து இருந்த மூன்று பிரமாண்ட எரிபொருள் டேங்குகள் வெடித்ததில், அப்பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ல் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பம், மாஸ்கோவின் கருங்கடல் கடற்படைக்கான முக்கிய கடற்படை தளத்தை கொண்டுள்ளது.
இதேபோன்று கடந்த வருடம் ரஷ்ய இராணுவம் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதலில், உக்ரைன் நகரின் பெரும் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் கொடுத்த பதிலடி
இந்த தாக்குதலால் நகரங்களின் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 25 பேருக்கு மேல் உயிரிழந்திருப்பதாகவும், பலரும் படுகாயம் அடைந்திருப்பதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் உக்ரைனிலுள்ள உமன் என்ற நகரில் கட்டடம் இடிந்து விழுந்ததில், 3 குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் ரஷ்யாவின் இந்த செயலுக்கு உக்ரைன் கொடுத்த பதிலடியாகவே நேற்றைய ட்ரோன் மூலமான தாக்குதல் சம்பவம் பார்க்கப்படுகின்றது.