இராணுவ வீரர்களுக்கு வெளிப்படையான தண்டனை: சரத் பொன்சேகா வலியுறுத்து
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகன் மீது தாக்குதல் நடத்திய இராணுவத்தினர் உட்பட இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்ட இராணுவ வீரர்களுக்கு வெளிப்படையான வகையில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் மூலம் இராணுவத் தளபதி, இராணுவம் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவத்தினரின் நற்பெயரைப் பாதுகாக்குமாறு இராணுவத் தளபதியிடம் கோரிக்கை விடுப்பதாக நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களை நோக்கி துப்பாக்கிகளை சுட்டுவதை தவிர்க்குமாறு காவல்துறை அதிகாரிகளிடமும் இராணுவத்தினரிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலம் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
விசா நிராகரிப்பால் உயிரைவிட்ட இந்திய மருத்துவர்! சிதைந்த அமெரிக்க கனவு..சிக்கிய கடிதம் News Lankasri