அன்னை பூபதி நினைவு ஊர்தி தடுக்கப்படவில்லை..! பொலிஸார் விளக்கம்
தியாகி அன்னை பூபதியின் நினைவு ஊர்தி தடுக்கப்படவில்லை; பாதுகாப்பு சோதனைக்காக மட்டுமே நிறுத்தப்பட்டதாக மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் அன்னை பூபதியின் நினைவு ஊர்தி பொலிஸாரால் தடுக்கப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மையல்ல என மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
குறித்த ஊர்திப் பயணத்திற்காக முறையான முன் அனுமதி பெறப்படவில்லை என்பதால், பாதுகாப்பு நடைமுறைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் ஊர்தி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு, உரிய விசாரணைகள் மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் பயணத்தைத் தொடர அனுமதி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தவறான புரிதல் காரணமாக ஊர்தி தடுக்கப்பட்டதாக செய்திகள் பரவியுள்ளதாகவும், ஆனால் சட்டரீதியான நடைமுறைகளைப் பின்பற்றியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri