ஜனாதிபதியின் மூன்று நாடுகள் பயணத்துக்கு 18 இலட்சம் ருபாய்: தெளிவுப்படுத்திய அரசாங்கம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெறும் 1.8 மில்லியன் ரூபாய்களில், மூன்று நாடுகளுக்குச் சென்று வந்தமை தொடர்பில், அரசாங்கம் தெளிவுப்படுத்தியுள்ளது.
இந்திய பயணத்துக்கு 1.2 மில்லியன் ரூபாய்கள் மட்டுமே செலவிடப்பட்டது என்றும், சீன பயணத்துக்கு 386,000 மற்றும் துபாய் வருகைக்கு 279,970 மட்டுமே செலவிடப்பட்டது என்றும், அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் சீனா மற்றும் துபாய் பயணங்களுக்கு இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதாகவும், இந்திய பயணத்துக்கு விமான டிக்கெட்டுகளுக்கு 386,000 செலவிடப்பட்டதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்திய பயணத்துக்காக ஜனாதிபதி செயலகம் மேற்கொண்ட மொத்த செலவு 386,000 மதிப்புள்ள விமான டிக்கெட்டுகள் உட்பட்ட 1,222,000 ரூபாய்கள் என்று அமைச்சர் கூறினார்.
சீனப் பயணத்திற்காக ஜனாதிபதிக்கு தினசரி 2,055 அமெரிக்க டொலர்களும், துபாய் பயணத்திற்காக 960 அமெரிக்க டொலர்களும் கிடைத்ததன.
முந்தைய அரசாங்கம்
எனினும் , அவர் அனைத்துப் பணத்தையும் ஜனாதிபதி செயலகத்திற்குத் திருப்பி அனுப்பியதாகவும் அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதி திசாநாயக்க மூன்று நாடுகளுக்கு 1.8 மில்லியன் செலவில் எவ்வாறு விஜயம் செய்தார் என்பதையும், மஹிந்த ராஜபக்ச தனது வெளிநாட்டுப் பயணங்களுக்காக 3,572 மில்லியன் ரூபாய்களை செலவழித்தார் என்பதையும், நாடாளுமன்ற உறுப்பினர்களால் உணர முடியவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று ஜெயதிஸ்ஸ கூறினார்.
ஜனாதிபதி மஹிந்தவின் 3,572 மில்லியன் என்பது ஜனாதிபதி செயலகம் ஏற்றுக்கொண்ட செலவுகள் மட்டுமே என்றும், மேலும் செலவுகள் அந்தந்த அமைச்சகங்களால் ஏற்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், வெளிநாட்டுப் பயணங்களுக்காக அந்தந்த அமைச்சகங்கள் ஏற்றுக்கொண்ட செலவுகளை தாங்கள் வெளிப்படுத்தவுள்ளதாகவும் என்று அவர் கூறினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        