இந்தியா கொல்கத்தாவில் இடம்பெறும் மட்டக்களப்பு ஓவியரின் கண்காட்சி (Photos)
மட்டக்களப்பு - செட்டிபாளையத்தை சேர்ந்த ஓவியரும் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளருமாகிய வேதராணியம் கோகுலறமணனின் முதலாவது சர்வதேச ஓவியக்கண்காட்சி இந்தியா கொல்கத்தாவில் நேற்று (01.08.2023) ஆரம்பமாகியுள்ளது.
சிறுவயது முதல் கலைத்துறையில் ஆர்வமிக்கவராக விளங்கிய இவர் தன்னை முழுமையாக வளப்படுத்திக்கொண்டு சிறப்புமிக்க ஓவியக் கலைஞராக திகழ்ந்து வருகின்றார்.
தமிழர் பண்பாட்டு ஓவியங்கள்
இவரது தமிழர் பண்பாட்டியல் சார்ந்ததும், தமிழர் கூத்துமரபு சார்ந்ததுமான கடந்த கால ஓவியங்கள் பலராலும் பாராட்டிப் பேசப்பட்டுள்ளதோடு பல ஓவியக் கண்காட்சிகளிலும் இடம்பெற்றுள்ளன.
நவீனத்துவ ஓவியக்கலையில் ஈடுபாடுடைய இவர் சிங்கள மக்களிடம் சிறப்புற்று விளங்கிய தென்னங்குருத்தோலை படைப்புக்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முதலில் அறிமுகப்படுத்தி பல கலைத்துவமான படைப்புக்களை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
You may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





பதினாறாவது மே பதினெட்டு 20 மணி நேரம் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
