மட்டக்களப்பில் புத்தாண்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சந்தை மற்றும் கண்காட்சி
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு உள்ளுர் உற்பத்தி விற்பனையாளர்களின் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது, தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதுடன் சலுகை விலையில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இந்தக் கண்காட்சி உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கல்வி உபகரணங்கள்
இதன்போது, பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பால் 20 மாணவர்களுக்கு கல்வி
உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் சத்யகௌரி தரணிதரன், நிர்வாக உத்தியோகத்தர் வி.தவேந்திரன், தலைமையக முகாமையாளர் புவனேஸ்வரி ஜீவகுமார், விற்பனையாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |