யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பார்வையற்றோருக்கான திறன் விருத்திக் கண்காட்சி
யாழ்ப்பாணத்தில் (Jaffna), 'விழிகள் செய்யும் விந்தையை விரல்கள் செய்யக் காண்பீர்' எனும் தொனிப்பொருளில் பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்த திறன் விருத்திக் கண்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கண்காட்சியானது, இன்றையதினம் (15.04.2024) யாழ். தந்தை செல்வா அறக்கட்டளை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, பார்வையற்றவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் முகமாக அவர்களால் மேற்கொள்ளப்படும் உற்பத்திகள், இசைக்கருவிகள், கிரிக்கெட் விளையாடுதல், நவீன தொலைபேசிகளை இயக்குதல், போன்ற பல விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சிறப்பு விருந்தினர்
அத்துடன், நிகழ்ச்சி தொடர்பில் பார்வையாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் நாளையும் இந்த கண்காட்சி தொடரவுள்ளது.
அதேவேளை, நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடமாகாண மகளிர் விவகாரம் சமூகசேவைகள்
அமைச்சின் செயலாளர் பொன்னம்பலம் வாகீசன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |