பிரித்தானிய தமிழர் பேரவையின் கண்காட்சியும் புத்தக வெளியீடும் (Photos)

Sri Lankan Tamils Sri Lanka Government Of Sri Lanka
By Dias May 29, 2022 08:40 AM GMT
Report

கடந்த ஏழு தசாப்தங்களாக தொடரும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு மற்றும் வன்முறைச் சுழற்சிகளின் வரலாற்றையும் அதற்கான காரணிகளையும் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட விடயங்கள் குறித்த “இலங்கையில் சீன ஆதிக்கத்துடன் தமிழ் இனப்படுகொலை தீவிரமடைகிறது” எனும் தலைப்பிலான கண்காட்சியைப் பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.

பிரித்தானியத் தமிழர் பேரவை 13ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவேந்தல் நிகழ்வின் ஒரு பகுதியாக, 18 மே 2022 அன்று லண்டனில் உள்ள ட்ரஃபல்கர் சதுக்கத்தில் (Trafalgar square) கூடியது.

செப்டம்பர் 2021 மற்றும் மார்ச் 2022 இல் நடந்த ஐ.நா. மனித உரிமைக் கழக(UNHRC) அமர்வுகளின் போது ஜெனீவாவில் காட்சிப்படுத்தியதன் தொடர்ச்சியாக மத்திய லண்டனில் ட்ரஃபல்கர் சதுக்கத்தில் பிரித்தானியத் தமிழர் பேரவை மூன்றாவது முறையாகக் காட்சிப்படுத்தியது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் கண்காட்சியும் புத்தக வெளியீடும் (Photos) | Exhibition And Book Launch British Tamil Assembly

கண்காட்சியை இலவசமாக பார்வையிட அனுமதி 

இக் கண்காட்சியைப் பொதுமக்களுக்கு இலவசமாகப் பார்வையிடும் ஏற்பாடுகள் செய்யப்பட்டதனால் பெருமளவிலான பல்லின மக்கள் வந்து பார்வையிட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது. இருபது இளம் தலைமுறை செயல்பாட்டாளர்கள் அவர்களிடையே காட்சிகளைப் பகிர்ந்து கொண்டு, தேவையான இடங்களில் மக்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் விளக்கமளித்தனர்.

ஒவ்வொரு காட்சியிலும் வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் மிகவும் காத்திரமானதும் முன்னர் எப்போதும் வெளிக் கொண்டு வரப்படாத புதிய தகவல்களாகவும் இருந்தது. கண்காட்சியை மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்ட ஏராளமான பல்லின மக்கள் அவற்றைப் படித்து, இளம் தலைமுறை செயல்பாட்டாளர்களிடம் கேள்விகளைக் கேட்டு தங்கள் கைபேசியில் காட்சிகளைப் புகைப்படம் எடுத்தனர்.

பிரித்தானிய தமிழர் பேரவையின் கண்காட்சியும் புத்தக வெளியீடும் (Photos) | Exhibition And Book Launch British Tamil Assembly

1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதற்கு எதிராகத் தமிழ் மக்கள் கிளர்ந்தெழுந்து ஜனநாயக வழிமுறைகளில் எதிர்ப்பைத் தெரிவித்த போது அதனையே சாட்டாக வைத்து தமிழ் பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைத்து தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு அரசு முன்வந்தது என்ற விளக்கத்துடன் முதல் காட்சி தொடங்கியது.

இது தமிழ் மக்களை ஆயுத ரீதியாக அழிக்கும் திட்டத்தை 1963ஆம் ஆண்டிலேயே இலங்கை தனது மூலோபாயத்தில் உட்கொண்டு வந்ததை நிரூபிப்பதுடன் இன அழிப்பின் உள்நோக்கத்தையும் (intent of Genocide) வெளிப்படுத்துகின்றது. வன்முறையின் சுழற்சிகள் அவ்வப்போது தொடர்ந்தன, ஒவ்வொரு முறையும் வன்முறையின் தீவிரம் அதிகரித்தது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் கண்காட்சியும் புத்தக வெளியீடும் (Photos) | Exhibition And Book Launch British Tamil Assembly

நம்பகமான ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட உண்மைகள் மற்றும் புள்ளிவிபரங்கள் தமிழர் தாயகத்தில் தேவையற்ற உயர் இராணுவ நிலைநிறுத்தத்தை மேற்கோள் காட்டி தமிழ் மக்களை அச்சுறுத்தல், கைது, தடுப்பு, சித்திரவதை மற்றும் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை (PTA) பாவித்து தமிழ் மக்களை மரண பயத்துடன் தொடர்ந்து அச்சுறுத்தி வைத்திருக்க வழிவகுத்தது.

குடிசார் வாழ்வில் இராணுவ மயமாக்கல், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு எதிராகப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் போர்வையில் அரச பாதுகாப்புப் படையினரால் இழைக்கப்பட்ட அட்டூழியங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், தமிழர் தாயகத்தில் சனத்தொகை மாற்றம், தமிழ் மக்கள் தொகை வீழ்ச்சி, தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு, தமிழர் தாயகத்தில் பௌத்த கட்டமைப்புகளை அதிகரிப்பது போன்ற காட்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் அவற்றை தம் கைத் தொலைபேசியில் (Mobile phone) பதிவு செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் கண்காட்சியும் புத்தக வெளியீடும் (Photos) | Exhibition And Book Launch British Tamil Assembly

இலங்கையில் சீனாவின் தாக்கம் 

இலங்கையின் தற்போதைய நிதி நெருக்கடிகளுக்கான காரணங்கள் மற்றும் விளைவுகளைக் காட்டும் புள்ளிவிபரத் தரவுகளுடன் வரைபடங்களுடன் காட்சிப் பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு சீனத் தாக்கம் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

சீனாவின் செல்வாக்கு, குறிப்பாகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின் இலங்கையை அதன் தற்போதைய அவல நிலைக்கு எவ்வாறு இட்டுச் சென்றது என்பதைப் பல காட்சிகள் தெளிவான ஆதாரங்களுடன் சித்தரித்தன.

பிரித்தானிய தமிழர் பேரவையின் கண்காட்சியும் புத்தக வெளியீடும் (Photos) | Exhibition And Book Launch British Tamil Assembly

இறுதிக் காட்சியானது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மாபாதக குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக உலகளாவிய மனித உரிமைகள் தடைச்சட்டத்தின் பிரயோகத்தை வலியுறுத்தும் அதேவேளை, இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறை உருவாக்குதல், உலகளாவிய நியாயாதிக்க சட்டத்தை (Universal Jurisdiction) வலுப்படுத்தி பயணத் தடை மற்றும் சொத்து முடக்கம், நெறிமுறையற்ற வர்த்தகத்தை நிறுத்துதல் மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய அம்சங்களை நடைமுறைப்படுத்த கோருகின்றது.

இக் கண்காட்சியின் உள்ளடக்கங்கள் தொகுக்கப்பட்டு முன்னுரையுடன் “Tamil Genocide Intensifies in Sri Lanka with Chinese Influence” எனும் தலைப்பில் ஒரு புத்தகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் கண்காட்சியும் புத்தக வெளியீடும் (Photos) | Exhibition And Book Launch British Tamil Assembly

இது கல்வியாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகக் காத்திரமான துல்லியமான தகவல்களை வழங்குகிறது.

இப்புத்தகமானது அதன் மூலோபாய முக்கியத்துவம் கருதி முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல் நிகழ்வு இடம்பெற்ற மேடையில் வைத்து லிபெரல் டெமோகிராடிக் (Liberal Democratic party) கட்சித் தலைவரும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் (APPG for Tamils) உப தலைவருமான சேர் எட் டேவி (Rt Hon Sir Ed Davey MP) மூலம் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன். பிரதிகள் அங்கு வருகை தந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏனைய முக்கியஸ்தர்ளுக்கும் வழங்கப்பட்டது.

பங்கு பற்றியோருக்கும், உதவி செய்தோருக்கும், பொதுமக்களுக்கும் லண்டன் மாநகரத்துக்கும் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாகவும் சிறப்பாகவும் நடந்தேற ஒத்துழைத்தமைக்கு பிரித்தானியத் தமிழர் பேரவை தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

“Tamil Genocide Intensifies in Sri Lanka with Chinese Influence” எனும் வெளியீட்டினை பின் வரும் இணைப்பினை பாவித்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். Tamil Genocide Intensifies in Sri Lanka with Chinese Influence – British Tamils Forum இது போன்ற ஆய்வுகளை நடத்தவும் தொகுத்து வெளியிடவும் பிரித்தானியத் தமிழர் பேரவை உங்களது செயல்பூர்வமான உன்னத பங்களிப்பினை வேண்டி நிற்கின்றது.

இளையோர், முதியோர், ஆண், பெண் என்ற வேறுபாடின்றி இதில் ஆர்வமுள்ளோர் அனைவரும் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம். அறிவின் ஆற்றலைப் பயன்படுத்தி எம் தேசத்தினை மீட்டெடுப்போம்.   

6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா

09 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

14 Jul, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US