வெளிநாட்டில் தமிழருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை! அரசு விளக்கம்
சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது.
சிங்கப்பூரில் போதைப்பொருட்கள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் (34) மாற்றுத் திறனாளியான இவர் சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்தியதாக கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில்,இறுதி நேரத்தில் தண்டனை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
2010ல் அவருக்கு நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது.இதனை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நிதிமன்றம் நிராகரித்தது.
இந்த வழக்கில் நாகேந்திரனுக்கு மன்னிப்பு அளிக்கக்கோரி மலேஷிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்குப் மற்றும் அதன் வெளியுறவுத் துறை அமைச்சர் சைபுத்தின் அப்துல்லா ஆகியோர் சிங்கப்பூர் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தனர்.
எனினும் அவர்களின் கோரிக்கையை ஏற்க சிங்கப்பூர் அரசு மறுத்துவிட்டது. துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு முதல் நாள் சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் மற்றும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் அவர்களுக்கு பதில் கடிதம் அனுப்பினர்.
அதில் போதை பொருள் கடத்தல்காரர் நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு சட்டப்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam