நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய மரண தண்டனை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்தது

Srilanka Colombo Court Trincomale
By Badurdeen Siyana Jul 29, 2021 10:21 PM GMT
Badurdeen Siyana

Badurdeen Siyana

in சமூகம்
Report

கொலைக்குற்றச்சாட்டு தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனினால் இருவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியைச் சேர்ந்த ஞானசிங்கம் அன்ரன் குணசேகரம் என்பவருக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவ கட்டளை தளபதி மற்றும் சிப்பாய் ஆகியோருக்கு நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார்.

குறித்த தீர்ப்புக்கு எதிராக இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு எட்டாம் மாதம் 20ஆம் திகதி மேன்முறையீட்டு விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில்,குறித்த வழக்கு தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு சரியானது என கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் வசித்து வந்த ஞான சிங்கம் அன்ரன் குணசேகரம் என்பவருக்கு மரணம் விளைவித்ததாக, அச்சுவேலி 51 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மற்றும் நகர 512 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மற்றும் அவரது சிப்பாய் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கின் எதிரிகளின் கோரிக்கைக்கு அமைவாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இருந்து திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணைகள் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் ஞான சிங்கம் அன்ரன் குணசேகரம் என்பவருக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் 2007 ஆம் ஆண்டு 12-ஆம் மாதம் 27ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் தண்டனை சட்டக்கோவை 296 பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதேநேரம் அது தொடர்பான விசாரணைகள் முடிவுற்று குறித்த வழக்கின் எதிரிகளுக்கு 2018ஆம் ஆண்டு எட்டாம் மாதம் 8ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனினால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அதன்போது முதலாம் எதிரியான யாழ்ப்பாணம் அச்சுவேலி 51வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி டி.ஆர்.பர்தலம்யுஸ் என்பவர் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் குற்றத்தை நிரூபிக்க தவறியதால் முதலாவது எதிரியின் வழக்கு விசாரணை முடிவில் விடுவித்து விடுதலை செய்யப்பட்டார்.

மேலும் இரண்டாம், மூன்றாம் எதிரிகளுக்கான குற்றச்சாட்டுகள் அரச சட்டவாதியினால் நிரூபிக்கப்பட்டதால் இரண்டாம் மூன்றாம் எதிரிகளுக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களினால் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.

எனினும் குறித்த தீர்ப்புக்கு எதிராக இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு எட்டாம் மாதம் 20ஆம் திகதி மேன்முறையீட்டு விண்ணப்பத்தை தாக்கல் செய்தனர்.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்த வேளையில் இரண்டாம் மூன்றாம் எதிரிகளின் சட்டத்தரணியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக குறித்த வழக்கு வாபஸ் பெறப்பட்டு அதனைத் தொடர்ந்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனாலும் 2018ஆம் ஆண்டு எட்டாம் மாதம் 8ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு உறுதி செய்யப்படுவதோடு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிரிக்கு தெரிவிக்கும் பொருட்டு எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு 8ஆம மாதம் 23ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் குறித்த இரண்டு எதிரிகளுக்கும் வாசித்து காட்டப்படவுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு சரியானது என கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் யாழ்.நகர 512 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி ராஜமந்திரி பியதாசகே பிரியந்த ராஜகருணா மற்றும் அவருடன் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் பியதாசகே பிரியந்த ராஜகருணா எனவும் தெரியவருகின்றது.  

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US