பெண்ணொருவரின் அடாவடித்தனத்தால் ஏற்பட்ட பரபரப்பு
கேகாலை, தெரனியகல பிரதேச சபை தலைவரை பெண் ஒருவர் கத்தியால் வெட்டிய சம்பவத்தால் பரபரப்பான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த தெரனியகல பிரதேச சபை தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெரனியகல சந்தைக்கு அருகில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
தெரனியகல பிரதேச சபை தலைவர் பயணித்த வாகனம் கடை ஒன்றிற்கு அருகில் நிறுத்திய போது அவருக்கு நெருக்கமான ஆதரவாளரான பெண் ஒருவர் அவ்விடத்திற்கு வருகைத்தந்துள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கலந்துரையாடலுக்கு இடையில் திடீரென பெண் கத்தியை எடுத்து குத்த முயற்சித்துள்ளார். எனினும் அதனை தடுக்க அவர் முயற்சித்த போது மூக்கில் பாரிய வெட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.