இலங்கை மதுவரித்திணைக்கள வருமானத்தில் பதிவான மாற்றம்
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை மதுவரித்திணைக்களம் 141.5 பில்லியன் ரூபாய் வரி வருவாயை ஈட்டியுள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. ஹேமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
வருவாய் அதிகரிப்பு பதிவு
2026ஆம் ஆண்டிற்காக அரசாங்கம் நிர்ணயித்துள்ள மொத்த 245 பில்லியன் ரூபாய் வருவாய் இலக்கில், முதல் ஆறு மாதங்களுக்கான இலக்கு 119.3 பில்லியன் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட இலக்குடன் ஒப்பிடுகையில் 118.6 சதவீத வருவாய் இலக்கை எட்டும் வகையில் திணைக்களம் வருவாய் ஈட்டியுள்ளது.
மேலும், 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பதிவான 117.03 பில்லியன் ரூபாய் வருவாயுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் வருவாய் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
வட-கிழக்கு சிங்களமயமாக்கல் என்பது இலங்கைத்தீவு சீனமயமாதலே 23 மணி நேரம் முன்
லண்டனில் இருந்து சரக்கு விமானத்தில் ரகசியமாக வெளியேற்றப்பட்ட அமெரிக்க தூதர்: அவரின் பின்னணி News Lankasri