விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடி கிளிநொச்சி திருநகர் பகுதியில் அகழ்வு பணி (Video)
புதிய இணைப்பு
கிளிநொச்சி - திருநகர் பகுதியில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளால் தங்கம் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இன்று (22.10.2023) காலை முதல் இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினர், பொலிஸார், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கிராம அலுவலர் முன்னிலையில் அகழ்வு பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த நிலையில், இன்றைய தினமும் அகழ்வு பணி இடம்பெற்ற இடத்தில் எந்த சான்று
பொருட்களும் காணப்படாத காரணத்தினால் கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் துபராகினி
ஜெகநாதன் அகழ்வு பணியை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
மீண்டும் அகழ்வு நடவடிக்கை
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிவான் ஜெ.சுபராஜினி முன்னிலையில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டிருந்த போதும் எந்தவித பொருட்களும் மீட்கப்படாத நிலையில் அகழ்வு நடவடிக்கை நிறுத்தப்பட்டு இன்றைய தினம் மீளவும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
